பால் குடி டேஸ் - 9. PALKUDI DAYS.
தருமபுரி நினைவுகள்.
நாயும் நானும் யாராகியரோ!
ஆறாம் வகுப்பு லீவு. புது ஃபிரெண்ட்ஸ் கிடைச்சாங்க. எங்க ஹவுஸ் ஓனர் ஒரு செட்டியாரம்மா. அவங்க கணவர் எம் ஜி நடேச செட்டியார்னு அந்த காலத்துல ஜமீன்தார். காங்கிரஸ் எம் எல் ஏவா இருந்தவர். அவருக்கு நிறைய சொத்து ஜில்லா பூரா. அதெல்லாம் என் அப்பாதான் கவனிச்சிட்டிருந்தார். அவருக்கு ரெண்டு பசங்க. ஜி என் தாஸ், ஜி என் குப்தா, ன்னு. சுதந்திரப் போராட்ட வீரர்ங்கிறதால இப்படி பேர் வெச்சார். தாஸ் தஞ்சாவூர்ல இருந்தார். அவரோட பசங்கதான் லீவுக்கு பாட்டி வீட்டுக்கு வந்தாங்க. மீனா அக்கா, ரத்தினவேலு என்ற பாபு, உமா, சுமதி, சிக்கி என்ற பாலாஜின்னு செம செட்டு. அங்க அவங்களுக்கு விளையாட யாரும் இல்லை. அதுனால எங்க வீட்டுக்கு வந்து விளையாட கூட்டிட்டு போயிடுவாங்க. காலைல அவங்க 8 மணிக்கெல்லாம் டிஃபன் சாப்பிட்டுடுவாங்க, அதுனால உடனேயே சிக்கி எங்க வீட்டுக்கு வந்து "பிடி வாரண்டு" வந்திருக்கேன்னு சொல்லி வெய்ட் செய்வான் எங்களை கூட்டிட்டு போக. நாங்க 9 மணிக்கு சாப்பிட்டவுடன் அவங்க வீட்டுக்கு போயிடுவோம் விளையாட. அங்க நெறைய காலி இடம் இருக்கும், நெறைய மரம் செடி கொடி கூட. அப்பறம் ஒரு பெரிய கிணறு பாசனம் செய்ய. அது மூடிட்டாங்க. அந்த இடமெல்லாம் முதல்ல வயலா இருந்ததாம்.
நாங்க கிரிக்கெட் விளையாடுவோம். முதல்ல அவங்களும் நான், எங்க அண்ணன் மட்டும் விளையாடுவோம், ரெண்டு மூணு நாள்ல என்னோட ஃபிரெண்ட்ஸும் விளையாட வந்துட்டாங்க. ஒரே குஷிதான். அங்கேதான் ராணி அப்படிங்கிற ஒரு நாய் - அவங்க வளத்தது. ஏற்கெனவே எனக்கு அஷ்டமத்துல பைரவர் பார்வை. நம்ம ராசி கூட்டத்துல நம்மளை மட்டும் பைரவர் தனியா அடையாளம் கண்டுக்குவார். அந்த நாய் சங்கிலில கட்டிப் போட்டிருக்கும். அது ஒரு ரெண்டு மூணு நாள் என்னை கவனிச்சுது. நான் வேகமாக பந்து எறிவேன். (LIVE WIRE என்று எனக்குப் பட்ட பெயர்) ஓடிவந்து வேகமாக அதோட எஜமானர் வீட்டு பசங்க மேல பந்து எரியறேன்னு நெனச்சுடுச்சு போல. அதற்கு என் மேல கோபம் உருவாகிடுச்சு. பௌலிங் போடாத சமயங்களில் என்ன லாங்ல நிறுத்திடுவாங்க, கிணத்துல பந்து விழாம கேட்ச் புடிக்க. அப்ப அது ஆக்ரோஷமா சங்கிலிய இழுத்துக்கிட்டு குரைக்கும் என்னப் பாத்து. ஒருநாள் சங்கிலிய அறுத்துக்கிட்டு வந்து அப்படியே என்மமேல பாஞ்சு என்னை கீழே தள்ளிவிட்டு என் நெஞ்சுல முன்னங்கால் ரெண்டையும் வெச்சு நின்னுக்கிச்சு. எல்லாரும் வந்து கஷ்டப்பட்டு அந்த நாயை இழுத்துக்கிட்டு போயி கட்டினாங்க. இது மாதிரி ரெண்டு மூணு தடவை ஆயிடுச்சி. அதுனால நான் அதை ஃபிரெண்டு புடிச்சிக்கலாம்னு வீட்டுல எனக்கு குடுக்கறதில கொஞ்சம் ஜோபில வெச்சிக்கிட்டு அதுக்கு போடுவேன். அதெல்லாம் தின்னுட்டு மறுபடியும் என்ன பார்த்து ஆக்ரோஷமா குரைக்கும். எனக்கு ஒரே கடுப்பு. (நாய் கூட லஞ்சம் வாங்கிக்கிட்டு ஏமாத்திடுதே. எம் எல் ஏ வீட்டு நாய் இல்லியா!)
இதுக்கு ஒரு பாடம் கத்துத் தரணும்னு நெனைச்சேன். ஒரு ஐடியா கிடைச்சது. தீபாவளி வந்தது நான் நிறைய டபுள் சரம் யானை வெடி எடுத்துட்டு அவங்க வீட்டுக்கு போனேன். (நாங்க எல்லாம் பட்டாசை கைலயே கொளுத்திப் போடற வீரங்க. அணுகுண்டையே கைல பத்த வெச்சு வானத்துல வீசி எறிவோம். அது உயரக்க போய் வெடிக்கறப்ப அதுல ஒரு ஆனந்தம்) ஒவ்வொரு சரமா பத்த வெச்சு அது மேல வீசி எறிஞ்சேன். அது பயந்து அலறி சங்கிலியை அறுக்க முடியாம அங்கேயும் இங்கேயும் பாஞ்சு தவிச்சது. அப்படியும் என் வெறி அடங்கல. மறுபடியும் வீட்டுக்கு வந்து இந்த முறை ஒரு பாக்ஸ் அணுகுண்டு எடுத்துக்கிட்டு அத்தனையையும் பத்த வெச்சு அது கிட்ட வீசி எறிஞ்சேன். அரண்டு போன அது சங்கிலியை அறுத்துக்கிட்டு கொஞ்ச தூரத்துல இருக்கற அவங்க சொந்தக்காரங்க வீட்டுக்கு ஓடிடுச்சி. திருப்பி அதை அவங்க வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வர ரொம்ப கஷ்டப் பட்டாங்க . அதுக்கப்பறம் அது என்னப் பாத்தாலே ஓட ஆரம்பிச்சிடுச்சு.
நாய்க்கும் நமக்கும் இருக்கற விரோதம் 11 ஆம் வகுப்பு வரை தொடர்ந்துச்சி. நான் டியூஷன் போயிட்டு வர்றப்பெல்லாம் கும்பலா நாய்ங்க என் சைக்கிளைத் தொரத்தும். இதுங்களுக்கும் பாடம் கத்துத் தரணும்னு, கிரிக்கெட் ஸ்டம்ப் கைல எடுத்துப் போக ஆரம்பிச்சேன். அதுங்க தொரத்திச்சுன்னா சைக்கிளை நிறுத்தி ஸ்டம்பால அதுங்கள விளாசிடுவேன். அதுவுமில்லாம மத்தியானமா நெறைய கல் ஒரு பைலை போட்டுக்கிட்டு போயி அதுங்கள தொரத்தி தொரத்தி அடிப்பேன். நம்ம குறி எப்பவுமே தப்பினதில்ல. அதுனால ஒரு வழியா நாய்த் தொந்தரவு விட்டுச்சு என்ன.

அப்படியே இப்ப 1983க்கு வருவோம். நான் டேபிள் டென்னிஸ் விளையாட க்ளப்க்கு டெய்லி போவேன், கிழட்டு நாய் ஒண்ணு பரிதாபமா சுத்திட்டிருக்கும். சாயங்காலம் பெரும்பாலும் அங்க டீ சாப்பிடுவோம், சைக்கிள்ல கொண்டு வருவாங்க. அப்ப நான் அந்த நாய்க்கு பிஸ்கட் வாங்கிப் போடுவேன். சில சமயம் பால் வாங்கி ஒரு கிண்ணத்துல வெப்பேன். அது சாப்பிட்டு போயிடும். ஒரு நாள் சாயங்காலம் நான் கொஞ்சம் சீக்கிரமே போனேன். யாரும் வரல. அதுனால அங்க இருக்கற டென்னிஸ் கோர்ட் சிமெண்ட் பெஞ்சுல உக்காந்திருந்தேன். அப்ப அந்த நாய் என்கிட்டே வந்து என்னையே உத்துப் பார்த்துகிட்டு இருந்துச்சு. அது என்னவோ சொல்ல வராப்ல தோணிச்சு எனக்கு. நானும் கவனிச்சேன். அப்பத்தான் பாத்தேன் அதோட ஒரு கண்ண சுத்தி பிரௌனா ஒரு தழும்பு மாதிரி இருந்தது. அப்பதான் புரிஞ்சுது அது சொல்ல வந்தது "நான்தான் ராணி"ன்னு.
என்ன ஒரு ராஜ வாழ்க்கை வாழ்ந்த நாய் அது. செட்டியாரம்மா இறந்து சொத்தெல்லாம் பிரிச்சப்பறம் இந்த நாயை அம்போன்னு விட்டிருக்காங்க. ரொம்பவே பாதிச்சிடுச்சி இந்த நிகழ்ச்சி எனக்கு. 83 ல நாங்க சென்னை வந்துட்டோம். நான் க்ளப் வாட்ச்மேன்கிட்ட கொஞ்சம் பணம் குடுத்து டெய்லி எதாவது வாங்கிப் போட சொன்னேன். அவரும் செஞ்சார் பாவம் அவர் செலவிலேயே (நான் குடுத்த பணத்தை ஒரு வாரத்திலேயே காலி பண்ணிட்டாரு மனுஷன் ஃ புல்லா) ஒவ்வொரு வருஷமும் ஊருக்கு போறப்ப க்ளப்புக்கு போவேன், வாட்ச்மேனை கேப்பேன். 3 மாசத்துல அது செத்துப் போச்சாம். அவர் அதை எங்க கிளப்பிலேயே ஒரு மரத்தடில அடக்கம் செஞ்சதா சொன்னாரு (அதுக்கு ஒரு அமௌன்ட் வாங்கிட்டாரு,அது வேற விஷயம்)
இதுனாலயே எனக்கு வளர்ப்புப் பிராணிகளை வளர்க்கறதுல விருப்பம் இல்ல.
அடுத்த வாரம் பூணல் போட்ட கதை:
தொடரும்.

No comments:
Post a Comment