சுதந்திர தினமும் பங்கஜமும் - தருமபுரி நினைவுகள். - 12
(நடுவில் கொஞ்சம் "பால்குடி டேஸ்" பக்கங்களிலிருந்து)
நான் 3 ஆவது படிக்கும்போது (5 ஆவது வரை இதே கதைதான்) சுதந்திர தினத்தன்று எங்கள் பள்ளியில் 7.30க்கெல்லாம் கொடியேற்றி ஆரஞ்சு மிட்டாய் தந்துடுவாங்க. சட்டையில் தேசியக் கொடியை குத்திக்கிட்டு பஸ் ஸ்டேன்ட் போனாக்க, எல்லா டவுன் பஸ்லயும் கலெக்டர் ஆபீஸ் போறதுக்கு ஃப்ரீ, கலெக்டர் கொடியேத்தறத பாக்கறதுக்கு, (ஸ்கூல் புள்ளைங்களுக்கு மட்டும்தான்). ஓசில அதுவும் தனியா பஸ்ல போறோம்ன்ற ஒரு வீரம்தான்.
கலெக்டர் ஆபீஸ் போய் நாங்க பார்வையாளர் இடத்துல உக்காந்துக்குவோம். போலீஸ், ஹோம்கார்ட், என் சி சி, ஸ்கவுட் னு வரிசையா ரெடியா இருப்பாங்க. கலெக்டர் வந்தவுடனே, இவங்க எல்லாரும் ஒரு மார்ச் பாஸ்ட், செஞ்சு கலெக்டருக்கு சல்யூட் அடிப்பாங்க, எங்களுக்கெல்லாம் இதே பெரிய ப்ரம்மாண்டமா இருக்கும். மார்ச் பாஸ்ட் முடிச்சு கலெக்டருக்கு சல்யூட் அடிச்சவுடனே அவர் கொடியேத்துவாரு, அப்ப துப்பாக்கில 3 தடவை சுடுவாங்க, கொஞ்சம் பயமாத்தான் இருக்கும், யார் மேலயாச்சும் பட்டா என்ன ஆவுறதுன்னு. எல்லாம் முடிஞ்சு 5 பைசா பாரீஸ் சாக்லேட் தருவாங்க, சூப்பரா இருக்கும்.
இது முடிஞ்சவுடனே கலை நிகழ்ச்சிகள். மொதல்ல போலீஸ்ல ஒரு க்ரூப் கலர் கலரா வேஷ்டியை பஞ்சகச்சம் மாதிரி கட்டிக்கிட்டு மேல வெள்ளை பனியன் போட்டுக்கிட்டு, "லெசீம்" அப்படித்தான் சொல்வாங்க - அதை தட்டிக்கிட்டு டான்ஸ் ஆடிட்டு வருவாங்க, இது தாண்டியா மாதிரி தாள நடை. ஆனா கட்டை ரெண்டும் ஒரு சின்ன சங்கிலியால ஜாயின் ஆயிருக்கும், நுனில சலங்கை கட்டியிருக்கும். (பார்க்கவும் : படம்) அதை ஷ்க், ஷ்க் னு தட்டிட்டு டான்ஸ் ஆடிட்டு வருவாங்க. போலீஸ்காரவுங்களுக்கு இதெல்லாம் தெரியுமான்னு ஆச்சரியமா இருக்கும். அது முடிஞ்சா உடனே போலீஸ் பாண்ட் குரூப் பாண்ட் வாசிப்பாங்க. தேவனே என்னைப் பாருங்கள் பாட்டு கூட வரும். (இதே போலீஸ் பெரிய அதிகாரிங்க வீட்டுல சாவுன்னா "வீடு வரை உறவு" பாட்டுக்கு பாண்ட் வாசிப்பாங்கன்றது வேற விஷயம்)

11 மணி வாக்குல கெளம்பிடனும். இல்லாட்டி ஃப்ரீ சேவை முடிஞ்சு போயிடும். ஒரு வாட்டி என் சித்தப்பா பையனும் கூட வந்தான் (அவனுக்கு 5 வயசுதான் இருக்கும், பூணல் போடறப்ப அடி வாங்கினானே அவனேதான்) திரும்பி வந்தவுடனே, எங்க அம்மா அவனை எப்படிடா இருந்துச்சுன்னு கேட்டாங்க, அவன், "பெரியம்மா, பெரியம்மா ஜோரா இருந்துச்சு, போலீஸ்காரங்க எல்லாம் பங்கஜத்தைக் கட்டிக்கிட்டு ஆடினாங்க"ன்னான் பாருங்க, எல்லாருக்கும் தூக்கி வாரிப் போட்டுச்சு. ஏன்னா அப்ப பங்கஜம் மாமியும் அங்க இருந்தாங்க. "என்னடா சொல்றே"ன்னு கேட்டதுக்கு "ஆமாம் பெரியம்மா, அப்பா, பெரியப்பா எல்லாம் கட்டிப்பாங்களே (அப்பவும் பொடி வெச்சே பேசறான் பாருங்க) தவசத்துக்கு" அப்படின்னு அவன் சொன்னவுடன்தான் புரிஞ்சுது அது பஞ்சகச்சம்னு, எல்லாருக்கும் நிம்மதி, பங்கஜம் மாமி பெருமூச்சு விட்டாங்க.
இப்படி போச்சு எங்க சுதந்திர தினம்.

No comments:
Post a Comment