பால்குடி டேஸ் 14 - தீபாவளி ஸ்பெஷல்
"அது ஒரு கனாக்காலம்,
தீபாவளி விழாக் கோலம்"
எல்லார்க்கும் தீபாவளின்னா சின்ன வயசுல ஒரே மாதிரி அனுபவம்தான் இருந்திருக்கும். புது ட்ரஸ், டப்பாசு, வாங்கின பெருமை, முடியாதவங்களுக்கு துக்கம், பண்டிகை இல்லாதவங்களுக்கு ஏக்கம், இது மாதிரி ஒரு 3, 4 வகைல அவங்க அவங்க அனுபவத்தை அடக்கிடலாம். இதுபத்தி நெறய பேர் எழுதிட்டாங்க, எழுதறாங்க, எழுதுவாங்க. நான் எழுதப் போறது "காலேசு டேஸ்" தீபாவளி. "பால்குடி டேஸ்" தீபாவளி இல்ல.
அப்பல்லாம் ஓல்ட் SSLC முடிச்ச ஒடனே நேர காலேசுதான். PUC னுட்டு டிகிரி படிக்கறதுக்கு முன்னாடி நம்மள காலேசுன்னா என்னன்னு பழக்கப் படுத்திடுவாங்க.
இஸ்கோல்ல படிக்கறப்ப இருந்த மாதிரி, தீபாவளிக்கு இன்னும் 100 நாள், 99 நாள்னு எல்லாம் எண்ணிக்கினு இருக்க மாட்டோம். வளந்துட்டோம்ல. ஒரு பிளானிங்கும் கெடையாது. தீபாவளி வந்துச்சுன்னா, புது ட்ரஸ் மாட்டிக்கிட்டு டப்பாசு வெடிச்சுட்டு ஒரு 3 பேர் கிளம்புவோம் (நான், லட்சுமணன், கணபதி சுப்பிரமணியம்) மத்த ஃபிரெண்ட்ஸ் வீட்டுக்கு. மொதல்ல ஸ்ரீதர் வீடு. எல்லார் வீட்டுலயும் அப்பா, அம்மா எங்கள அவங்க வீட்டு பசங்க மாதிரிதான் நடத்துவாங்க. அங்க சில பல மல்லிப்பூ இட்லிகள், தும்பைப்பூ போல தேங்காய் சட்னி முழுங்கிட்டு அடுத்து ஜீவாங்கற வெங்கட்ராமன் வீடு. அங்கேயும் இதே கதைதான், அதே காலனில நாலு வீடு தள்ளி மோகன்ராஜ் வீட்டுக்கு போயி அங்கேயும் இட்லி. அப்பறம், ரவிச்சந்திரன், லக்ஷ்மணன் வீடு, கணபதி சுப்பிரமணியம் வீடுன்னு எல்லார் வீட்டுலயும் இட்லி தின்னாம விட மாட்டாங்க. லக்ஷ்மணன் வீட்டுக்கு போறதுக்குள்ள ஆல்ஃபிரட்ங்கிற கிறிஸ்டியன் எங்க கூட சேந்துக்குவான். நடு நடுல சோடா குடிச்சுக்குவோம். இதுல நடுல யார் கண்ணுலேயாவது பட்டோம் அவ்வளவுதான். அவங்க வீட்டுலயும் இட்லி தின்னணும். இப்படி ஒரு 6, 7 வீட்டுல ஒரு த்ரீ ஹவர்ஸ்ல 50 இட்லியாவது தின்னுடுவோம் அந்த வயசு அப்படி. இப்ப நெனச்சா மலைப்பா இருக்குது. எல்லாம் முடிச்சு எங்க வீட்டுக்கு வருவோம். எங்க வீட்டுலதான் பசங்க கொஞ்சம் பயப்படாம இருப்பாங்க, ஏன்னா நாங்க இட்லி செய்ய மாட்டோம். அங்க எங்க பிளானிங் ஆரம்பிக்கும், மேட்னி படம் எங்க, ஃபர்ஸ்ட் ஷோ எங்க பாக்கறதுன்னு. டிக்கெட் சொல்லி வெக்கறது எங்க அப்பாவோட வேல. நேர தியேட்டர் மேனஜரப் பாத்து இன்னின்ன ஷோக்கு இத்தினி டிக்கெட் வேணும், என் பையன் வருவான்னு சொல்லிடுவாரு. சில சமயம் டிக்கெட்ட அவரே வாங்கி வந்துடுவாரு. மேட்னிக்கு ஒரு 8 லேர்ந்து 10 பேர்தான் போவோம். அநேகமா, சென்ட்ரல் இல்லாட்டி கணேசா தியேட்டர்தான். எங்க தீபாவளியே சாயங்காலம் ஃபர்ஸ்ட் ஷோ ரத்னா தியேட்டர்லதான். ரெண்டு பாக்ஸ் இருக்கும். ஒவ்வொண்ணும் 24 சீட். 48யும் புக் செஞ்சுடுவோம். ஒரு 24 பியூர் எங்க கும்பல். மத்ததுல தெரிஞ்சவங்களுக்கு குடுத்துடுவோம்.
எங்களுக்கு படத்தப் பத்தி கவலை கிடையாது. ஒரே கலாட்டாதான். பட்டாசு வெடிக்க மாட்டோம் தியேட்டர்ல. ஆனா கேப் ரோல், துப்பாக்கி எடுத்துட்டு போயிடுவோம். ஹீரோவ காமிக்க ஆரம்பிச்சதுலேர்ந்து ஒரே கலாட்டாதான். பாட்டுக்கு டேன்ஸ். இப்படியே போகும். கிளைமாக்ஸ்ல துப்பாக்கில சுடற சீன் வந்தா, வில்லனோ, இல்ல கதாநாயகனோ மொழ நீளம் வசனம் பேசறப்ப நாங்க ஒரு 4, 5 பேர் துப்பாக்கியால டுமீல் டுமீல்னு சுட்டு, பால்கனில இருக்கற சில தாய்குலங்களுக்கு பீதிய கெளப்புவோம். (இது தாய் மீது சத்தியம் படத்தப்ப நடந்தது)
படம் முடிஞ்ச ஒடனே அவங்க அவங்க வீடுதான். எங்களுக்கு அன்னிக்கு கெடச்ச சுதந்திரத்த மதிச்சு, வீட்டுக்கு நேரத்தோட நல்ல புள்ளைங்களா வந்துடுவோம். வந்து சாப்பிட்டு எங்க தெருவுல நைட் பத்து மணிக்கு ஒரு மாபெரும் வான வேடிக்கை (வான வேடிக்கைதான்) நடத்துவோம். அதுக்கு ஒரு 5, 6 ஃபிரெண்ட்ஸ் வந்துடுவாங்க. எங்க தெரு ஆளுங்க எல்லாரும் அவங்க அவங்க வீட்டு வாசல்ல நின்னுக்குவாங்க. பக்கத்துக்கு தெரு ஆளுங்களும் வந்துடுவாங்க.
எங்க தெரு ஒரு முட்டுத் தெரு. அதுல கடைசில ஒரு டெலிஃபோன் போஸ்ட் போட்டிருந்தாங்க. ஆனா யாரும் டெலிஃபோன் கனெக்க்ஷன் கொடுக்கல. நாங்க எல்லார் வீட்டுலேர்ந்தும் சிங்கம் மார்க் டபுள் சரம் கலெக்ட் பண்ணி வெச்சிருப்போம் மொதோ நாளே. எப்படியும் ஒரு 20, 25 சரம் சேரும். அது இல்லாம ஒரு டஜன் மத்தாப்பு. அப்பிப்ராம் ரெண்டு டஜன் ராக்கெட். மொதல்ல ஒரு 6 கம்பி மத்தாப்பஒண்ணா கட்டி தலைகீழா வெச்சு அது எரிஞ்சு முடிக்கற இடத்துல டபுள் சரம் கட்டுகள ஒண்ணா சேத்து கட்டுவோம். சரம் முடிஞ்சவுடனே மீதி இருக்கற மத்தாப்பு அத்தனையும் பத்திக்கறா மாதிரி செட் பண்ணிடுவோம். அதெல்லாம் எரிஞ்சவுடனே 2 டஜன் ராக்கெட்டையும், அழகா கூம்பை கவுத்த மாதிரி கட்டி வெச்சுடுவோம்.
இப்பதான் ஃபைனல் டச். மாஞ்சா கயிறால இதுங்களை சேத்துக் கட்டி, நுனில ஒரு கல்ல கட்டி டெலிஃபோன் போஸ்ட்ல மேல குறுக்குக் கம்பில தூக்கி வீசி அது கீழே வந்தவுடனே, பட்டாசுல இருக்கற மத்தாப்ப பத்த வெச்சு கயிறை இழுத்து பட்டாசு எல்லாம் மேல போற மாதிரி புடிச்சுப்போம். மொதல்ல அந்த மத்தாப்பு எரிஞ்சு, பட்டாசு எல்லாம் அந்தரத்துல வெடிக்கும். ஒரு 15 நிமிஷம் காதப்பொளக்கற சத்தம். அது முடிஞ்சவுடனே மீதி இருக்கற கம்பி மத்தாப்பு எல்லாம் எரியும் பாருங்க. ஜெகஜோதியா இருக்கும். ஹைலைட்டே கடைசில ராக்கெட் எல்லாம் வானத்துலேர்ந்து சும்மா நிலாவுக்கு போறா மாதிரி சீறிக்கிட்டு திசைக்கு ஒண்ணா பாயும் பாருங்க. எந்த வித வாணவேடிக்கையும் இதுக்கு ஈடாகாது. இதெல்லாம் எங்க சீனியர்ங்கதான் செய்வாங்க. ஏன்னா மத்தவங்க சொதப்பி ஏதாவது ஆச்சுன்னாங்கிற ஒரு தற்காப்புதான். ஒரு 5, 6 வருஷம் இதெல்லாம் நடந்துச்சு. அப்பறம் நான் 83 ல மெட்றாஸ் வந்துட்டேன். அதுக்கப்பறம் இது படிப்படியா கொறஞ்சு கடைசில நின்னே போச்சு. ஆனா ஒரு 4, 5 வருஷம் மட்டும் தீபாவளி பொங்கலுக்கு ரத்னா தியேட்டர் சினிமா மட்டும் நிச்சயம் இருந்துச்சு. எல்லாரும் கல்யாணம் ஆகாதவங்க அதுனால எந்த ஊர்ல இருந்தாலும் பண்டிகைக்கு ஒண்ணா தர்மபுரில கூடிடுவோம். ஒவ்வொருத்தரா கல்யாணம் ஆகி தர்மபுரி வர்றது கொறைஞ்சு போச்சு. அதுனால இந்த சந்தோஷங்களும் மறந்தே போச்சு. கல்யாணம் ஆனா ஆண்களும் பலத எழக்கத்தான் வேண்டியிருக்கு. என்னமோ பொம்பளைங்கதான் அவங்க சொந்தங்கள விட்டு வந்துட்ட மாதிரி சொல்றாங்க. நம்ம நட்புங்கள விட்டுப் பிரிஞ்ச வலி எங்கே புரிய போவுது?
(யாரேனும் விடுபட்டிருந்தால் மன்னித்துக் கொள்ளவும். எழுதும்போது பலவித உணர்ச்சிகள். மிகுந்த பிரயாசையுடன்தான் எழுத வேண்டியிருந்தது)

No comments:
Post a Comment