பால்குடி டேஸ் (PAALKUDI DAYS) - 11
(தருமபுரி நினைவுகள்)
பள்ளி திறந்து 7 ஆம் வகுப்பிற்கு போயாச்சு. நான் அப்ப்பாவு நகர் ஸ்கூல்லேர்ந்து டவுன் ஸ்கூலுக்கு மாத்திக்கிட்டேன், எனக்கும் அக்கா மாதிரி ஸ்கூலுக்கு லன்ச் கட்டித் தருவாங்கன்னு. அதெல்லாம் கெடையாது, வந்து சாப்பிட்டுப் போன்னுட்டாங்க. இங்க விளையாட மைதானம் கெடையாது. வேஸ்டு. என்ன புதுசா ஃபிரண்ட்ஸ் கெடைச்சாங்க. பார்த்தசாரதி, உதயா, பாஸ்கர் னு. இங்க குறும்பு செய்ய ஒண்ணும் வழியில்ல. அதுனால ஸ்கூல் விட்டவுடன் வீட்டுக்கு ஓடி வந்துடுவோம். வந்து தெருல விளையாட்டு.
அந்த வருஷம் நடந்த ஒரே ஒரு இன்ட்ரஸ்டான விஷயம் பெங்களூர், மைசூர் டூர்தான். 20 ருபாய் ஆளுக்கு. 20 ரூபாய்க்கு தருமபுரிலேர்ந்து மைசூர்-பெங்களூர் பஸ்ஸுல கூட்டிட்டுப் போய், மூணு வேளை சூப்பர் சாப்பாடு ரெண்டு நாளைக்கு. 1972 ஆம் வருஷம், இப்ப முடியுமா?டூர் ரொம்ப நல்லா இருந்துச்சி. அப்பத்தான் வசந்த மாளிகை ரிலீஸ் ஆன சமயம். பஸ்சுல அந்தப் படத்தோட பாட்டுதான் திருப்பித் திருப்பி பாடிட்டுப் போனோம். மொதல்ல சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி. அங்கேருந்துதான் ஹொகேனல்லுக்கு தண்ணி வருதுன்னு சொன்னாங்க. பிரமாண்டமா இருந்துச்சு. கொஞ்சம் பயமாவும் இருந்துச்சு. அருளானந்தம்னு ஒரு தமிழ் வாத்தியார்தான் பொறுப்பு. அவருக்கு என்னைக் கண்டாலே என்னவோ புடிக்காது. அங்கிருந்து சாமுண்டி மலை, சிரவண பெலகோலா எல்லாம் போனோம் அப்பா, கோமதேஸ்வரர் சிலைதான் எவ்வளோ பெருசு. அது அடில நின்னா, அதோட கணுக்கால் உயரம் கூட வரல. எல்லாம் பாத்துட்டு அன்னிக்கு எதோ ஒரு ஸ்கூல்ல நைட் ஹால்ட். நைட் சாப்பாடு ஹோட்டல்ல. சாப்பாடு எல்லாம் அருமையா இருந்தது. மறுநாள் பெங்களூர். பெங்களூர்ல எனக்கு ஞாபகம் இருந்தது எல்லாம் கப்பன் பார்க், லால் பாக் பார்த்ததுதான். (அதைக் கூட ரொம்ப நாள் லால் பார்க்னுதான் சொல்லிட்டிருந்தோம்). அங்க கண்ணாடி மாளிகை ரொம்ப புடிச்சிருந்தது. அது லண்டன் க்ரிஸ்டல் பேலசோட மாதிரியாம்.
நீ ஒன்னும் கலாட்டா பண்ணலியான்னு கேக்கறீங்களா? பெங்களூர்ல நைட் சாப்பிட ஹோட்டல் வாசல்ல நிக்கறப்ப பசங்க மோரிஸ் வாழைப்பழம் வாங்க வெலை கேட்டாங்க. அவன் கன்னடத்துல சொன்னான். நான் இருங்கடா, நான் பேரம் பேசறேன்னு சொல்லி, "எஷ்டு"ன்னு கேட்டேன், அவன் ஒந்து ஹத்து பைசா ன்னு சொன்னேன். நான் ஹத்து பைசாக்கு ஹத்து கொடுதியான்னு கேட்டேன். அவன் கோவம் வந்து என்னை தொரத்த நான் ஒரே ஓட்டம் நடு ரோட்ல. வாத்தியார் கிட்ட செம அடி. ரோஷம் எல்லாம் அப்பறம் வெச்சுக்கலாம்னு சாப்பாட்டை முடிச்சோம். தயிர் கட்டித் தயிர். அருமையா இருந்தது. நாங்க ஒரு நாலு பேரு சீக்கிரம் சாப்பிட்டோம். நான் வாங்கடா நம்ம பஸ்சுல போய் உக்காந்துக்கலாம்னு அவங்களைக் கூட்டிட்டுப் போயிட்டேன். சாப்பிட்டு முடிஞ்சவுடனே ஆளுங்களை எண்ணிப் பாத்திருக்கார் வாத்தியார். 4 பேர் இல்லை. ரொம்ப நேரம் தேடியிருக்காங்க. யாரோ 4 பசங்க பஸ் பக்கம் போனாங்கன்னு சொல்லவே பஸ்சுல வந்து பாத்தா நாங்க இருந்தோம். கோவத்துல என்ன மட்டும் பின்னி எடுத்துட்டார் அருளானந்தம் சார். எனக்கு ரொம்ப அவமானமாப் போச்சு.
கைச்செலவுக்கு குடுத்த பணத்துல நான் 4 முலாம்பழம் வாங்கினேன். ஃபுட்பால் சைஸ் ஒண்ணொண்ணும். ஒண்ணு 50 பைசாதான். அதெல்லாம் ஒரு பனியன் துணிமாதிரி ஒரு துணிலதான் கட்டித்தருவாங்க. அதை பஸ் கம்பில முடிச்சு போட்டு கட்டி வெச்சேன். அருளானந்தம் சார் ரொம்ப டயர்ட் ஆயிட்டாரு, எங்களையெல்லாம் கட்டி மேச்சு. நான் கீழே படுத்துக்கறேன்னு ஒரு துணியை விரிச்சு கீழே படுத்துட்டாரு. நல்ல தூக்கம் வேற அவருக்கு. மணி பன்னெண்டாச்சு. நம்ம வேலையைக் காட்டவேண்டிய நேரம் வந்தாச்சு. நான் கட்டித்தொங்க விட்டிருந்த 4 பழங்கள்ல அவர் தலைக்கு நேர இருக்கற ஒண்ணை அவுத்து விட்டேன். அது நல்லா பழுத்துருந்த பழம் வேற, "டிஸ்யூங்" ன்னு அவர் தலைல விழுந்து அப்படியே அவர் மூஞ்சில்லாம் அப்பிக்கிச்சு. அவர் கத்திகிட்டே எழுந்தாரு. நான் வேணும்னே பயத்துல கத்தறா மாதிரி அய்யோ பேயின்னு பலமா கத்தவே, ட்ரைவர்லேர்ந்து தூங்கிட்டிருந்த அத்தனை பேரும் அலறிட்டாங்க. அதுல அவர் இன்னும் திகில் ஆயிட்டாரு. அப்பறம் பஸ்ஸ நிறுத்தி அவருக்கு மூஞ்சி கழுவ தண்ணி குடுத்து, ஒரு ஜன்னலோர சீட்ல தூங்க வெச்சோம். அப்பறம் நான் தூங்கினேங்கிறீங்க. மனசுக்குள்ள எம் என் நம்பியார் மாதிரி சிரிச்சிட்டே இல்ல வந்தேன் ஊருக்கு.
அதைத் தவிர வேற சுவையான விஷயம் இல்ல. அடுத்து 8 ஆவது. அதுலதான் ஸ்ரீதர் வந்து சேர்ந்தான். இன்னி வரைக்கும் தொடர்புல இருக்கற ஃ பிரண்டுல ஒருத்தன். அந்த வருஷம் எங்களுக்கு பப்ளிக் எக்ஸாம். அப்பல்லாம் அப்படிதான். எனக்கு எக்ஸாம் சமயத்துல பயங்கர டைபாயிடு . அப்பல்லாம் 45 நாள் வைத்தியம் அதுக்கு. என்னால எக்ஸாம் எழுத முடியல, ஒரு டாக்டர் சர்டிபிகேட் வாங்கி கொடுத்துட்டேன். அப்ப எங்க ஃபேமிலி ஃபிரண்ட் சரோஜா டீச்சர் (Anandhakumar Mak, YOUR MOTHER ONLY) வந்தாங்க, அவங்க கிட்ட எங்க அக்கா அண்ணன் எல்லாம் அவங்க வாங்கின சர்டிபிகேட் கப் எல்லாம் காமிச்சிட்டு இருந்தாங்க. நீ ஒண்ணும் வாங்கலியானு அந்த டீச்சர் என்னைக் கேட்டப்ப, நான் டாக்டர் சர்டிபிகேட் வாங்கியிருக்கேன்னு சொன்ன உடனே சிரிச்சுட்டாங்க.
9 ஆவதும் அவ்வளவு சுவாரஸ்யமில்ல. என்ன பழையபடி மெயின் ஸ்கூலுக்கே போனதுதான். 10, 11 ல நடந்த சுவையான விஷயங்கள் அடுத்த பதிவில்.
(தொடரும்)

No comments:
Post a Comment