பால்குடி டேஸ் (PAAL KUDI DAYS)
தருமபுரி நினைவுகள் - 3
இந்த வாரம் பள்ளிக்கூடத்தை விட்டு கொஞ்சம் வீட்டுல நடந்ததப் பாப்போம்.
அப்ப எங்க ஊர்ல பொழுதுபோக்கு கோயில் இல்லேன்னா சினிமாதான். ஊருக்குள்ள வேற ஒண்ணும் சுவாரசியமா கிடையாது. எப்பவாவது சர்க்கஸ், பொருட்காட்சி இப்படி வரும். அதை விட்டா கொமர்சாம்பட்டி தேர்தான் (குமாரசாமிப்பேட்டை) எங்க ஊர்ல ஸ்பெஷலு. மத்தபடி கோவிலோ சினிமாவோதான்.
ஊருக்குள்ள மூணே மூணு பெரிய தியேட்டர்தான் , சென்ட்ரல், கணேசா லட்சுமி. அப்பறம் மேற்கால ரவி, தெற்கால ரவி பாரடைஸ், கிழக்கால சித்ரான்னு (அன்னசாகரம்) கூரைக் கொட்டாய்ங்க. வடக்கால வாஸ்து சரியில்லைன்னு கட்டல போல.
எங்க அம்மா மாசத்துக்கு ஒன்னு, ரெண்டு சினிமா பாப்பாங்க. கூடவே எங்களையும் கூட்டிக்கிட்டு போவாங்க, நமக்கு அப்ப எல்லாம் ஒரு இடத்துல 3 மணி நேரம் உக்காந்திட்டிருக்க இருப்பு கொள்ளாது. படம் ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துல பின்பக்கம் திரும்பி உக்காந்துக்கிட்டு ஓட்டை வழியா வர வெளிச்சத்தை (PROJECTOR HOLE) பாத்திட்டிருப்பேன். அதுவும் போரடிச்சா, தண்ணி வேணும்னு அடம்பிடிப்பேன். அப்ப எல்லாம் இது மாதிரி பொது இடத்துல தண்ணி கிடைக்காது. அதுனால கலர் வாங்கித் தருவாங்க. (அதுக்காத்தானே தண்ணின்னு அடம் புடிக்கறது) அப்பறம் இப்பவே பாத்ரூம் வருதுன்னு அடம் புடிப்பேன். மத்தவங்க சுவாரசியமா படம் பாக்கறப்ப நைசா சீட்டிலேர்ந்து எழுந்து மாடில ப்ரொஜெக்டர் ரூமுக்கு போயிடுவேன். இடைவேளைல தேடுவாங்க. அப்பறம் கம்ப்ளயின்ட் செய்ய மேனேஜர் ரூமுக்கு போனா (எல்லா தியேட்டர் மேனேஜரும் அப்பாவுக்குத் தெரிஞ்சவங்க) அங்க பையன் ப்ரொஜெக்டர் ரூம்லதான் தூங்கிட்டிருக்கான், பயப்படாதீங்கன்னு சொல்லி, அப்பறம் நான் கண் முழிச்சவுடனே, போண்டா, வடை, ஆரஞ்சு மிட்டாய் எல்லாம் குடுத்து எங்க அம்மா கிட்ட கொண்டு வந்து விடுவாங்க. இந்த ரோதனை தாங்காம என்னை அப்பப்ப விட்டுட்டு போக ஆரம்பிச்சாங்க ஏதாவது ஒரு காரணம் சொல்லி. நம்ம எவ்வளோ அப்பாவி பாருங்க. கற்பூரம் படத்துக்கு போனாங்க, நானும் வருவேன்னதுக்கு, "வேணாம்டா, கல்பூரம் எரியறப்ப நெறையா பொகை வரும், ஒன் கண்ணெல்லாம் எரியும்" னு சொன்னாங்க. நானும் பயந்து சரின்னு வீட்டுலே இருந்துட்டேன். (இன்னிவரை அந்தப் படம் பாக்கவே இல்லையே! ரொம்ப மானஸ்தன்!).
அப்பறம் நமக்கே சிவாஜி படம்னா ஒரு இன்டரஸ்ட் வந்துச்சு. அது தவிர ஊருக்கு வெளில இருக்கற தியேட்டருக்கு போனா குதிர வண்டிதான். ஏதோ பிக்னிக் பாக்கறா மாதிரி இருக்கும். கைல மிக்ஸர், பிஸ்கட் எல்லாம் கட்டி எடுத்து வந்துடுவாங்க அம்மா. இப்படி முஸ்தீபுகளோட என்னுடைய தானைத்தலைவர் (அன்றும், இன்றும், என்றும்) சிவாஜி நடிச்ச காவல் தெய்வம் பாக்கப் போனோம். பாவம் சிவாஜி அவரை ஜெயில்ல போட்டிருப்பாங்க. சரி கடைசில விட்டுடுவாங்கன்னு நான் படம் பாத்திட்டிருந்தேன். கடைசில தூக்குல போட்டுட்டாங்க. அவர் செத்துடுவாரு. நான் அங்கேயே விழுந்து புரண்டு "ஓ"ன்னு அழுதேன். என்னை குண்டுக்கட்டா கட்டி குதிரவண்டில வீட்டுக்கு தூக்கிட்டு வரதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு. வீட்டுலேயும் அழுகைதான். 2, 3 நாள் ஸ்கூலுக்கு போகல (பெரிய எம் பி ஏ படிப்பு!) இப்படியே ஒரு 10 நாள் ஓடிச்சு
ஒரு நாள் சாயங்காலம் அப்பா மிக்ஸர், பக்கோடா எல்லாம் வாங்கி வந்தார். இன்னிக்கு நம்ம எல்லாம் சிவாஜி படம் பாக்கப் போறோம்னு சொன்னார். நான் நம்பல, நான் வரமாட்டேன், அவர்தான் அப்பவே செத்துட்டாரேன்னு சொன்னேன். எங்க அப்பா எனக்கு தன்மையா எடுத்து சொன்னாரு, அவர் சாகலைடா, நான் உனக்கு ஒரு சிவாஜி என்ன, 3 சிவாஜி காமிக்கறேன்னு சொல்லி என்னை கூட்டிக்கினு போனாரு. நான் அரை மனசோட போனேன். என்ன ஆச்சரியம், நெஜமாவே மூணு சிவாஜி! அதுல அப்பா சிவாஜியையும், அண்ணன் சிவாஜியையும் பாக்கறப்போ பயமா இருந்தாலும், "ஆஹா, சிவாஜி சாகலை, உயிரோடுதான் இருக்கார்னு ஒரு சந்தோஷத்தோட படத்தை ரசிச்சுப் பாத்தேன். படம் முடிஞ்சு அப்பா கிட்ட என்னோட சந்தேகத்தை "டாடி, ஒரு டவுட்டு"ன்னு கேட்டேன். அவர் புரிய மாதிரி, இதெல்லாம் நிஜம் இல்லடா, கதை, இவங்க எல்லாம் ஆக்ட் செய்யறாங்க, அது மாதிரின்னு, சொன்னார். அப்பறம்தான் மனசு சரியாச்சு.
இது இப்படி இருக்க, எங்க அம்மா எம் ஜி ஆர் படமும் பாப்பாங்க. எனக்கு அதில இன்டரஸ்ட் இல்ல, பாதி படத்துல வீட்டுக்கு ஓடி வந்துடுவேன், அம்மா வர வரைக்கும் தெருவில விளையாட்டுதான். பசிச்சா, யார் வீட்டுலேயாவது சாப்பாடு. அப்படியே தூங்கிடறதும் உண்டு. அம்மா வீட்டுக்கு வந்தவுடனே கொண்டு வந்து விட்டுவாங்க.
இதை தவிர பசங்களுக்கு பொழுது போக்குன்னு சொன்னா அது பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்துல பார்க்குன்னு ஒண்ணு, கொஞ்சம் செடி, ஒரு பெரிய சறுக்கு மரம், அப்பறம் சங்கு ஊதுற கோபுரம். தெருவில பெரிய பசங்களோட அங்க எப்பவாவது விளையாட அனுப்புவாங்க. அங்க போயி சறுக்கு மரம் ஏறி சறுக்கி, டவுசரக் கிழிச்சிக்கிட்டு, முட்டிக்கால் எல்லாம் பேத்துக்கிட்டு வருவோம். அந்த சங்கு தினோம் காலம்பற 8 மணி, மதியம் 1 மணி சாயந்திரம் 5 மணின்னு ஊதுவாங்க. அப்பறம் தலைவர்கள், காந்தி, அண்ணாதுரை மாதிரியானவங்களுக்கு அவங்க செத்த டயத்துல ஊதுவாங்க. நாங்க வெளையாடற சமயத்துல ஊதினா சவுண்டு தாங்காம ஒரே ஓட்டம்தான் வீட்டுக்கு. ஒரு மைல் தூரம் காதைக்கிழிக்கற சவுண்டு தொரத்திட்டே வரும்.
சாயங்காலம் தெருவில ஓடிப் பிடுச்சு விளையாடறது, (ஜூட், அம்பிளீஸ்) நொண்டி, ஐஸ் பாய் (ஐ ஸ்பை (EYE SPY) க்கு நாங்க வெச்ச பேரு) விளையாடுவோம். இது போக தெருக் கடைசில இருக்கற டீச்சர் வீட்டுல ஊஞ்சல் ஆடுவோம்.
இப்படியே பொழுதைக் கழிச்சு முழுப் பரீட்சை முடிஞ்சு லீவு விட்டாங்க.
(தொடரும்)

No comments:
Post a Comment