பால்குடி டேஸ் (PAAL KUDI DAYS)
தருமபுரி நினைவுகள் - 4
ஒரு வழியா ரெண்டாம் க்ளாஸ் பரீட்சை எழுதி முடிச்சாச்சு. லீவுக்கு திருச்சி போனோம். திருச்சில எங்க சித்தி வீடு. சித்தியை விட எங்க சித்தப்பாக்காகவே நாங்க அங்க போவோம். நல்ல வாட்ட சாட்டமான ஆளு. பயங்கர கோவக்காரர். ஆனா பாசம் ஜாஸ்தி அதை விட. "ரமணி பாய்" அப்படின்னு கூப்பிடுவாரு என்ன. அவங்க இருந்தது பாலக்கரைல பிரபாத் டாக்கீஸ் கிட்ட ஒரு வளைவு, அதுக்குள்ளே போனா, ஸ்டீம் பீடி கம்பெனி ஓனர் கட்டிவிட்ட ஸ்டோர் மாதிரி குடித்தனங்கள் ஒரு நாலஞ்சு. அதுல இவங்க இருந்த ஸ்டோர் "நானா முனா ஸ்டோர்" னு 12 குடித்தனங்கள் இருந்த ஒரு ஸ்டோர், உய்யக் கொண்டான் வாய்க்கால் கரையோரமா.
வாசக்கதவு திறந்தவுடன் ஒரு நடை. அங்க மாடிப்படி இருக்கும். நடையைத்தாண்டி வீடுங்க ஒரு சதுர வடிவுல வரிசையாக் கட்டியிருப்பாங்க, ஒவ்வொரு வீடும் ஒரு கூடம், ஒரு சமையல் ரூம். அவ்வளோதான். வீடுகளுக்கு மத்தியில பெரிய சதுர வடிவுல தாவாரம். அந்தத் தாவரத்து மத்தில ஒரு பாத்ரூம் லேடீஸ் குளிக்க. பக்கத்துல கிணறு. 10 அடி ஆழத்துல தண்ணி இருக்கும் எப்பவுமே. ஜென்ட்ஸ் எல்லாம் குளிக்க அந்த கிணத்தடிதான். டாய்லெட் ஜெண்ட்ஸ்க்கு ஒண்ணு, லேடிஸ்க்கு ஒண்ணுன்னு தனித்தனியா (அதுக்கு மேல விவரம் வேண்டாம்).
எங்க சித்தப்பாவுக்கு நாலு பசங்க. ஒரு பொண்ணு இருந்தது.. பேரு சித்ரா. (நான் அதை ஒத்தைக் கையால தூக்கிட்டு ஓடுவேன். பாவம் ஆறு மாசத்துலேயே செத்துப் போச்சு). நாங்க மூணு பேரும் அவங்களோடசேந்தாலே ஒரு பட்டாளம் ஆயிடும். அது தவிர ஸ்டோர்ல மத்த குடித்தனங்கள்ல இருக்கற வாண்டூஸ் எல்லாம் சேந்து ஒரு 15 பேர்க்கு மேல தேறும். மெஜாரிட்டி ஜெண்ட்ஸ்தான். விளையாட வெளிய எங்கயும் போக வேண்டாம். உள்ளேயே எங்க அட்டகாசம் தாங்காது. இதுல பெரிய மொட்டை மாடி வேற. காலம்பற சாப்பிட்டப்பறம் ராத்திரி வரை ஒரே கூத்துதான்.
11 மணி ஆச்சுன்னா பெரியவங்க செத்த கண்ணசந்த நேரமாய் பார்த்து நைசா உய்யக் கொண்டான் வாய்க்கால்ல குளிக்க கெளம்பிடுவோம். வீட்டுக்குத் தெரிஞ்சா திட்டுவாங்க. அப்பல்லாம் வாய்க்கால்ல நெறைய தண்ணி ஓடும். (இப்ப அது திருச்சிக்கு ஒரு கூவம் ஆயிடுச்சு) ஒரு ஒண்ணரை மணி நேரம் ஒரே கும்மாளம்தான். 12.30க்கு எங்க சித்தப்பா வரதுக்குள்ள திரும்பி வந்துடணும். அவர் பாத்துட்டார்னா முதுகு பழுத்துடும். யார் வீட்டுப் பையனா இருந்தாலும் சரி. குளிச்சிட்டு வந்து தாவாரத்துல ஒணத்திருக்கிற துண்டை ஏதாவது ஒண்ணு எடுத்து பாத்ரூம்ல போய் தொடைச்சிக்கிட்டு சைலண்டா வீட்டுக்குள்ள போயிடுவோம், விளையாடிட்டு வந்த மாதிரி.
லேடீஸ் சில்ட்ரன் இது மாதிரி வாய்க்கால்ல விளையாட முடியாது (அவங்களுக்கு தொடப்பக்கட்டை பிஞ்சிடும்) அவங்கள்லாம் மொட்டமாடில நின்னுக்கிட்டு வாய்க்காலை வேடிக்கை பாத்திட்டிருப்பாங்க. அங்கிருந்து தண்ணில கல் போட்டு வெளையாடறதுதான் அவங்க விளையாட்டு. ஒரு தடவ அப்படி வெளையாடிட்டிருக்கறப்ப எங்க அக்கா சின்ன கல்லு கிடைக்காம ஒரு பெரிய செங்கல், பாதியா அங்க இருந்தத தூக்கி தண்ணில போட்டாங்க, அப்பதான் ஒரு ஆளு தண்ணிக்குள்ள முழுகி எழுந்தான், அவன் மண்டைல பட்டு ஒரே செகப்பா தண்ணி ஆயிடுச்சு (ஒண்ணும் இல்ல, அது உளுத்துப் போன செங்கல்லு தண்ணில பட்டவுடனே பொடிப் பொடியா கரைஞ்சுடுச்சி, தண்ணில கல் விழுந்ததால அதனோட வேகமும் கொறஞ்சிடுச்சு, பெருசா ஒன்னும் அடிபடல) உடனே எங்க அக்காவும் அவங்க ஃபிரெண்ட்ஸும் அந்த ஆளு தலைல அடிபட்டு ரத்தம்தான் கொட்டுதுன்னு பயந்துகிட்டு ஓடி வந்து வந்து அவங்கவங்க வீட்டுக்குள்ள பதுங்கிட்டாங்க. அந்த ஆளு அப்படியே எழுந்து வந்து கரெக்ட்டா எங்க வீட்டு வாசல்ல நின்னு சத்தம் போட்டான். அந்த சமயத்துல எங்க சித்தப்பா வேலைலேர்ந்து வீட்டுக்கு வந்தாரு. அவர்கிட்ட அவன் கம்ப்ளெயிண்ட் செஞ்சான் உங்க பொண்ணு என் தலைல கல்லப் போட்டான்னு. (பாவம் சொட்டைத் தலை வேற) எங்க சித்தப்பாவுக்கு எங்க அக்கா மேல தனிப் பாசம் (அவரோட பொண்ணு செத்ததால அவருக்கு பொண் கொழந்தைன்னா ரொம்ப பாசம்) அவர் அவனை கன்னா பின்னான்னு திட்டி அனுப்பிட்டிட்டார், என் பொண்ணையாடா சொல்றே, அவ ரொம்ப அடக்கம்டான்னு. பயந்த மாதிரி போஸ் கொடுத்திட்டிருந்த எங்க அக்காவுக்கு கேண்டீனிலேர்ந்து கொண்டு வந்த ஸ்வீட் குடுத்து சமாதானப் படுத்தினாரு சித்தப்பு. நாங்க அன்னிக்கு மாட்டிட்டோம். முதுகு பழுத்துடுச்சு. (மண்டைய ஒடச்ச அக்காவுக்கு ஸ்வீட்டு, எங்களுக்கு முதுகுல தவில், எல்லாம் நேரம்) ஆனா அன்னிக்கு எங்களையெல்லாம் எதிர்நீச்சல் சினிமாவுக்கு ஈவினிங் ஷோ அனுப்பினாருன்றது வேற கதை. (பசங்களை மட்டும், தரை டிக்கெட். பொண்ணைக் கூட்டிக்கிட்டு நைட் ஷோ போவாங்க ஃபர்ஸ்ட கிளாசுக்கு. அப்பலேர்ந்தே பெண்களின் ஆதிக்கம் ஆரம்பிச்சாச்சு.) கோவத்துல அடிச்சிடுவாரு, அப்பறம் இழுத்து வெச்சுக் கொஞ்சுவாரு.
மதியம் சாப்பிட்டப்பறம் (அருமையான பழைய சோறு, பாட்டி கையால, மாவடு, மாகாணிக்கிழங்கு இப்படி ஏதாவது தொட்டுக்க) போடுவாங்க. அப்ப வெய்யில்ல விளையாட விடமாட்டாங்க. தாயம், கேரம் போர்டு, சீட்டுக் கட்டு இப்படி ஏதாவது விளையாடுவோம் 4 மணி வரை. இப்படி இல்லாம தாவாரத்துல வெய்யிலை வெளையாடிணோம், எங்க பாட்டி முதுகு பழுக்க வெச்சுடுவாங்க, இதுல ஒரு இன்டரஸ்டிங்கான விஷயம் என்னன்னா அவங்களுக்கு சரியா பார்வை தெரியாது, மசமச ன்னு உருவம் மட்டும்தான் தெரியும், எல்லாரும் ஏறக்குறைய ஒரே ஒயரம், சட்டை போட்டுக்க மாட்டோம். (அப்பல்லாம் வீட்டுக்குள்ள சட்டை போட்டுக்கக் கூடாது) அதுனால யார் முதுகுலயாவது ஒண்ணு வெப்பாங்க.(பெரும்பாலும் ஈரக்கையோடதான் இருப்பாங்க, அப்ப முதுகுல வாங்கினா எப்படி இருக்கும்னு அனுபவிச்சாதான் தெரியும்). அடிவாங்கினவன் "ஐயோ பாட்டி, நான் அந்தாத்து பையன்"னு அவங்க அம்மா பேரு சொல்லி அலறுவான். (யாரும் கோவிச்சுக்க மாட்டாங்க, இன்னும் ரெண்டு வைங்கன்னு சிபாரிசு செய்வாங்க). உடனே எல்லாரும் தேன் கூடு கலைஞ்சா மாதிரி சிதறி ஓடிடுவோம் ஆளாளுக்கு ஒரு தெசைல. 4 மணிக்கு ஏதாவது பட்சணம், சூடா டீ குடுத்து வெளயாட அனுப்புவாங்க (இப்படித்தான் சின்ன வயசுலேயே நம்மளை சாப்பாட்டு ராமன் ஆக்கிட்டாங்க)
சாயங்காலம் 4 மணிக்கப்புறம் ஒட்டக விளையாட்டு விளையாட்டு விளையாடுவோம், ஒவ்வொருத்தனும் முதுகுல இன்னொருத்தனை தூக்கிட்டு ரேஸ் ஓடணும். அப்படி என்னை எங்க சித்தப்பா பையன் தூக்கிட்டு ஓடறப்ப இன்னொரு பையன் அவன் காலை தடுக்கிவிட்டான் ரெண்டு பேரும் கீழே விழுந்தோம். அங்க குமுட்டி அடுப்பு அலம்பி காய வெச்சிருந்தாங்க. அது என் மோவாய்க்கட்டைய வெட்டிடுச்சு. டாக்டர்கிட்ட கூட்டிட்டு போய் பிளாஸ்திரி போட்டாங்க வெள்ளையா. அப்ப அப்புசாமிக் கதை ஃபேமஸ் குமுத்துல. அவரோட தாடி மாதிரி இருக்கு என் மோவாய்கட்டைன்னு எனக்கு அப்புசாமின்னு பேர் வெச்சுட்டாங்க.
5 மணி ஆனாதான் வீட்டுக்கு வெளியே போய் கிரௌண்ட்ல அரை மணி நேரம் விளையாட விடுவாங்க. 5.30க்கு வீட்டுக்கு வந்துடணும். கை கால் அலம்பி ஸ்தோஸ்திரம் சொல்லி முடிச்சா அப்பறம் மறுபடி வீடு வீடா போயி விளையாட்டு.
ஞாயித்துக் கிழமையானா எங்க சித்தப்பா மலைக்கோட்டை கூட்டிட்டுப் போவாரு (நடந்தே போகணும்) போகும்போது பாலக்கரை பிரம்மானந்தால சர்பத். உச்சிப் பிள்ளையார் தரிசனம் முடிஞ்சவுடனே தெப்பக்குளம் காமதேனுல சமோசாவும் கரும்பு ஜூஸும்.
எங்க சித்தப்பா பிரபாத் தியேட்டர் வாசல்ல நைட் கடை போட்டிருந்தாரு. அதுனால தியேட்டர்ல எல்லாரையும் பழக்கம். நைட் சிவாஜி படம் எதாவது ஓடினா எங்களை கொண்டு போய் விட்டுடுவாரு. (ஃப்ரீதான்). படம் முடிஞ்சு வந்தவுடனே அவர் கடைல பூரியோ தோசையோ குடுத்து வீட்டுக்கு அனுப்பிடுவாரு. இப்படியே ஜாலியா பொழுது போகும்.
லீவு முடியப்போற நாலஞ்சு நாள் இருக்கறச்சே எங்க அம்மா வந்துடுவாங்க தருமபுரிலேர்ந்து எங்களை கூட்டிட்டு போக. அவங்க வந்தா கல்லணை, முக்கொம்புன்னு ப்ரோக்ராம் இருக்கும். அப்பறம் திருச்சி சுத்துப்பட்டுல இருக்குற எங்க அம்மாவோட சொந்தக்காரங்க வீடு அப்படின்னு கொஞ்சம் பிஸிதான். இப்படிதான் ஒரு தடவ வாளாடில இருக்கற அவங்க மாமாவப் பாக்கக் கூட்டிட்டு போனாங்க. போகறப்பவே நான் சொன்னேன். நான் வரல, பிரபாத்ல சந்திரலேகா படம் ஓடுது இன்னிக்கு கடேசி, அதைப் பாக்கணும்னு, அவங்க சாயங்காலம் வந்துடலாம்னு சொல்லிக் கூட்டிட்டுப் போனாங்க. அங்க போயி கெளம்பர வழியா தெரியல. சரி நைட் ஷோவாவது போவோம்னு பாத்தா அங்கேர்ந்து 8 மணிக்குத்தான் கிளம்பினாங்க, வந்து சேர 10.30 ஆயிடுச்சு. எனக்கு துக்கம் தாங்கல (அந்த துக்கம் தர்மபுரில அன்னசாகரம் சித்ரால அந்தப் படத்தை ஏழெட்டு வருஷம் கழிச்சுத்தான் பாத்து கழிஞ்சுதுன்றது வேற விஷயம்).
இப்படியே திருச்சி மாநகரை ஒரு கலக்கு கலக்கிட்டு ஊர் வந்து சேர்ந்தோம். ரெண்டாவது பாஸ் செஞ்சு மூணாம் கிளாஸ் போயாச்சுன்னு ரிசல்ட் போட்டாங்க.
(தொடரும்)

No comments:
Post a Comment